“லிபர்ட்டி சிறைச்சாலை,” நண்பன்,ஆகஸ்ட் 2025, 26–28.
நண்பன் மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2025
லிபர்ட்டி சிறைச்சாலை
மிசௌரியில் வாழ்ந்த பலருக்கு பரிசுத்தவான்களைப் பிடிக்கவில்லை. அவர்களை வெளியேறச் செய்ய ஆளுநர் படைவீரர்களை அனுப்பினார்.
படைவீரர்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தையும் சபையின் பிற தலைவர்ககளையும் கைது செய்தனர். ஒரு இரவு, காவலர்கள் பரிசுத்தவான்களுக்குச் செய்த கெட்ட காரியங்களைப் பற்றி சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவர் எழுந்து நின்று, “அமைதி!” என்று கத்தினார். அவர் தேவனின் வல்லமையால் பேசினார். அவர்கள் வருத்தப்படுவதாகக் கூறிவிட்டுப் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
பின்னர், ஜோசப்பும் அவரது நண்பர்களும் லிபர்ட்டி என்ற ஊரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலை மிகவும் குளிராகவும், சிறியதாகவும், இருட்டாகவும் இருந்தது. அவர்களிடம் தூங்குவதற்கு கொஞ்சம் அழுக்கு வைக்கோல் மட்டுமே இருந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு அவர்களை நோய்வாய்ப்படுத்தியது.
ஜோசப் பரிசுத்தவான்களைப் பற்றி கவலைப்படுதல். ஆனால் அவரால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.
ஜோசப் அதிகமாக ஜெபித்தார். தேவன் தன்னையும் சபை உறுப்பினர்களையும் மறந்துவிட்டாரா என்று அவர் கேட்டார்.
தேவன் ஜோசப்பின் ஜெபத்திற்கு பதிலளித்தார். அவர், “என் மகனே, உன் ஆத்துமாவுக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்றார். ஜோசப்பின் சவால்கள் என்றென்றும் நிலைத்திருக்காது என்றும், அவை அவருடைய நன்மைக்காகவே இருக்கும் என்றும் அவர் அவரிடம் கூறினார். அவர் ஜோசப்புடன் “என்றென்றும்” இருப்பார் என்று வாக்குத்தத்தம் செய்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7, 46).
வண்ணமிடும் பக்கம்
நான் மற்றவர்களுக்கு ஒளியாக இருக்க முடியும்.
கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்
நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறீர்கள்?
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, ஆகஸ்ட் 2025. மொழிபெயர்ப்பு. Tamil. 19642 418