2025
லூசி சத்தியத்தைக் கண்டறிந்தாள்
ஏப்ரல் 2025


“லூசி சத்தியத்தைக் கண்டறிந்தாள்,” நண்பன், ஏப்ரல் 2025, 26–28.

நண்பன் மாதாந்திர செய்தி, ஏப்ரல் 2025

லூசி சத்தியத்தைக் கண்டறிந்தாள்

ஒரு பெண் தறியில் அமர்ந்திருக்கையில், ​சில மனுஷர்களை உள்ளே அனுமதிக்க இளஞ்சிறுமி கதவைத் திறக்கிறாள்.

ஒரு நாள், 15 வயதான லூசி மோர்லி தனது பக்கத்து வீட்டு அபிகாயில் டேனியல்ஸ் என்பவருக்கு துணி நெய்வதற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அவர்கள் வேலை செய்யும் போது, மூன்று ஊழியக்காரர்கள் கதவைத் தட்டினார்கள். ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ள இயேசு கிறிஸ்து தங்களை அனுப்பியதாக அவர்கள் சொன்னார்கள்.

அம்மனுஷர் சிறுமியுடன் பேசும்போது தறியில் இருக்கும் பெண் முகம் சுளிக்கிறாள்.

இயேசு ஜோசப் ஸ்மித்தை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்திருப்பதாக அம்மனுஷர் அபிகாயிலிடமும் லூசியிடமும் சொன்னார்கள். மார்மன் புஸ்தகத்தைப் பற்றியும் சொன்னார்கள்.

கோபமான பெண் தன் வீட்டை விட்டு அம்மனுஷரை விரட்டுகிறாள்

அபிகாயில் கோபமடைந்தது லூசிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஊழியக்காரர்களை தன் வீட்டை விட்டு வெளியேறச் செய்தார்.

அச்சிறுமி அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிவருவதை அம்மனுஷர் திரும்பிப் பார்க்கிறார்கள்

இந்த ஊழியக்காரர்கள் தேவனின் ஊழியர்கள் என்பதை லூசி அறிந்திருந்தாள். அச்சாலையில் சிறிது தூரத்தில் இருந்த தன் குடும்பத்தை சந்திக்குமாறு சொன்னாள்.

சிறுமியுடனும் அவளது குடும்பத்தினருடன் அம்மனுஷர் இரவு உணவு மேஜையில்

ஊழியக்காரர்கள் மோர்லியின் வீட்டிற்கு சென்றனர். தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்க லூசியின் பெற்றோர் ஊழியக்காரர்களை அழைத்தார்கள்.

சிறுமி ஒரு பெண்ணின் தோள்களில் துண்டைப் போடுகிறாள், பின்பு மற்றொருவர் ஆற்றில் ஞானஸ்நானம் பெறுகிறார்.

அன்று இரவு, நள்ளிரவில், 17 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். அடுத்த சில நாட்களில், ஊழியக்காரர்கள் பேசுவதைக் கேட்ட மேலும் 50 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். லூசியின் தோழியான அபிகாயில் கூட தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவரும் அவரது கணவரும், லூசி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஞானஸ்நானம் பெற்று இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தனர்.

வண்ணமிடும் பக்கம்

இயேசு கிறிஸ்துவினால், நான் உயிர்த்தெழுவேன்.

காலியான கல்லறையின் கோட்டுப்பட விளக்கம்

கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்

ஈஸ்டர் நாளில் இயேசுவை எப்படி நினைவில் கொள்கிறீர்கள்?