2025
ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது
மார்ச் 2025


“ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது,” நண்பன், மார்ச் 2025, 26-28.

மாதாந்தர நண்பன் செய்தி, மார்ச் 2025

ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–73ல் மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:12 லும் இந்தக் கதையை நீங்கள் வாசிக்கமுடியும்.

கிறிஸ்து நேபியரை சந்திப்பதைக் காட்டுவதற்காக ஜோசப் ஸ்மித் ஆலிவர் கௌட்ரியிடம் ஒரு கற்பனைக் குமிழியுடன் பேசுகிறார்

ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளைப் பெற்ற பிறகு, அவற்றை மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவர் சொன்னதை ஆலிவர் கௌட்ரி எழுதினார். அவர்கள் இதைச் செய்யும்போது, எல்லோரும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டனர்.

ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் காட்டினுள் ஜெபம் செய்தல்

மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க யாருக்கு தேவனுடைய அதிகாரம் இருக்கிறது என்று ஜோசப்பும் ஆலிவரும் வியந்தனர். அவர்கள் தேவனிடம் ஜெபம் செய்து கேட்க காட்டினுள் சென்றனர்.

ஜோசப் ஸ்மித்தின் தலையில்  தனது கைகளை வைத்திருக்கும் தூதன்

அவர்கள் ஜெபிக்கும்போது, ஒரு தூதன் தோன்றினான். அவன் தான் யோவான் ஸ்நானன் என்று கூறினான், அவன் நீண்ட காலத்திற்கு முன்பு இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படியாக அவன் ஜோசப்புக்கும் ஆலிவருக்கும் ஆரோனிய ஆசாரியத்துவத்தை வழங்கினான். ஆசாரியத்துவம் என்பது தேவனின் வல்லமை. இது தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஜோசப் ஸ்மித் ஆலிவர் கவுட்ரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

ஜோசப்பையும் ஆலிவரையும் ஞானஸ்நானம் பெறும்படி யோவான் ஸ்நானன் கூறினா. அவர்கள் ஒரு நதிக்குள் சென்று ஒருவருக்கொருவர் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்!

ஜோசப் ஸ்மித்தின் தலையில் மூன்று தூதர்கள் தங்கள் கைகளை வைத்தல்

பின்னர், மற்ற தூதர்களும் வந்தனர். இயேசுவின் அப்போஸ்தலர்களில் மூன்று பேர்—பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான்—ஜோசப் மற்றும் ஆலிவருக்கு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அளித்தனர். இப்போது ஜோசப்பும் ஆலிவரும் பரிசுத்த ஆவியின் வரத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.

வண்ணமிடும் பக்கம்

இயேசு “இருதயத்தின் பாடலை” விரும்புகிறார்.

இசைக் குறிப்புகளுடன் இதயம்

கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்

நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடும்போது எப்படி உணர்கிறீர்கள்?