“ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளைப் பெறுதல்,” நண்பன், பெப்ருவரி 2025, 26-28
“மார்மன் புஸ்தகம் உண்மை என்பதற்கு நானே சாட்சியாக இருக்க முடியும்.” நண்பன், பெப்ருவரி 2025, 48.
நண்பன் மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2025
ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளைப் பெறுதல்
ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:28–60ல் இந்தக் கதையை நீங்கள் வாசிக்கமுடியும்.
முதல் தரிசனத்தின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப் ஸ்மித் தான் செய்த சில தவறுகளினால் மிகவும் வருந்தினார். அவர் பரலோக பிதாவிடம் அதற்காக ஜெபித்தார்.
ஜோசப் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, ஒளி அறையை நிரப்பியது. ஒரு தூதன் காற்றில் நிற்பதை அவர் பார்த்தார். தூதனுடைய பெயர் மரோனி என்பதாகும்.
தங்கத்தகடுகளில் அல்லது பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு புஸ்தகம் இருப்பதாக மரோனி கூறினான். அது ஜோசப்பின் வீட்டருகிலுள்ள ஒரு மலையில் புதைக்கப்பட்டிருந்தது. அந்த புஸ்தகம் நீண்ட காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த மக்களைப்பற்றியது . இந்த புஸ்தகத்தை ஜோசப் மொழிபெயர்க்க தேவன் உதவுவார் என மரோனி கூறினார்.
ஜோசப் மலைக்கு சென்று ஒரு கனமான பாறையின் அடியில் தங்கத்தகடுகள் இருப்பதை கண்டுபிடித்தார். ஜோசப் தகடுகளை எடுக்கத் தயாராகவில்லை என்று மரோனி வந்து அவரிடம் கூறினார்.
ஜோசப்புக்கு வயது வந்த போது, மரோனி மலையில் சந்தித்து அவரிடம் தகடுகளைக் கொடுத்தான். அவைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறு மரோனி ஜோசப்பிடம் கூறினான்.
ஜோசப் தகடுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அவருக்கு உதவ தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தினார். 1830 இல் மார்மன் புஸ்தகமாக அந்த புஸ்தகம் வெளியிடப்பட்டது. அது இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் அவரின் சுவிசேஷம் குறித்தும் கற்றுத்தருகிறது.
வண்ணமிடும் பக்கம்
மார்மன் புஸ்தகம் உண்மை என்பதற்கு நானே சாட்சியாக இருக்க முடியும்.
கோரி எக்பெர்ட்டின் விளக்கப்படம்
மார்மன் புஸ்தகத்திலுள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்கள் கற்றுக்கொள்ள நீங்கள் எப்படி உதவலாம்?
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, பெப்ருவரி 2025. மொழிபெயர்ப்பு. Tamil. 19641 418