நேபி குழந்தை இயேசுவை காணுதல்நண்பன்,டிசம்பர். 2024, 26—27.
மாதாந்திரநண்பன்செய்தி, டிசம்பர் 2024
நேபி குழந்தை இயேசுவை காணுதல்
விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி
நேபியின் தந்தை லேகி, இயேசு கிறிஸ்துவை பற்றிய ஒரு தரிசனத்தை கண்டான். நேபியும் இந்த தரிசனத்தை காண விரும்பினான். அவன் தந்தை கண்டதை காண வேண்டி ஜெபித்தான்
பரிசுத்த ஆவியானவர் நேபிக்கும் அதே தரிசனத்தைக் காட்டுதல். மரியாள் என்ற பெயருடைய ஒரு இளம் பெண்ணை நேபி கண்டான். இவளே தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தாயாவாள் என்று பரிசுத்த ஆவியானவர் கூறினார்.
நேபி, குழந்தை இயேசுவை மரியாளுடன் காணுதல். இயேசு பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு உதவ பூலோகத்திற்கு வருவார் என்று பரிசுத்த ஆவியானவர் கூறினார்.
நேபி இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கண்டான். அவர் ஜனங்களுக்கு ஊழியம் செய்வதையும் போதிப்பதையும் கண்டான். நேபி இரட்சகரை குறித்ததான அநேக காரியங்களை கற்றறிந்தான். வேதங்கள் வாசிப்பதன் மூலம் நீங்களும் அவரைப் பற்றி கற்றுக்கொள்ளலாம்.
வண்ணமிடும் பக்கம்
கிறிஸ்துமஸ் என்பது இயேசுவைப் பற்றியது
பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” (ஏசாயா 9:6).
© 2024 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி,, டிசம்பர் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19350 418